பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவு துவங்க வலியுறுத்தல்

Added : டிச 15, 2020
Share
Advertisement
தேனி : ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளிகளில் பொருளாதாரம், வரலாறு, வணிகவியல் உள்ளடக்கிய கலைப்பிரிவு பாடத்திட்டத்தை துவக்க அரசு முன் வர வேண்டும்'' என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின்

தேனி : ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளிகளில் பொருளாதாரம், வரலாறு, வணிகவியல் உள்ளடக்கிய கலைப்பிரிவு பாடத்திட்டத்தை துவக்க அரசு முன் வர வேண்டும்'' என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் விருப்பப்படி பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். பள்ளி கல்வி துறையில் சி.இ.ஓ., டி.இ.ஓ., பி.இ.ஓ., பதவிகளில் உள்ள அதிகாரிகள் பி.எட்., பட்டம் பெற்றுள்ளனர். ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறையில் பி.எட்., பட்டம் படிக்காதவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதால் குறைகளை களை வதில் பிரச்னை எழுந்துள்ளது. அதனால் மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்.சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரில் விருது வழங்க வேண்டும்.

இந்த பள்ளிகளில் படித்த 7 மாணவர்கள் 'நீட்' தேர்வு மூலம் இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 86 மேல்நிலை பள்ளிகளில் 44 பள்ளிகளில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டம் துவங்கப்படவில்லை. இங்கு துவங்கிட வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X