தேனி : ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளிகளில் பொருளாதாரம், வரலாறு, வணிகவியல் உள்ளடக்கிய கலைப்பிரிவு பாடத்திட்டத்தை துவக்க அரசு முன் வர வேண்டும்'' என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் விருப்பப்படி பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். பள்ளி கல்வி துறையில் சி.இ.ஓ., டி.இ.ஓ., பி.இ.ஓ., பதவிகளில் உள்ள அதிகாரிகள் பி.எட்., பட்டம் பெற்றுள்ளனர். ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறையில் பி.எட்., பட்டம் படிக்காதவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதால் குறைகளை களை வதில் பிரச்னை எழுந்துள்ளது. அதனால் மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்.சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரில் விருது வழங்க வேண்டும்.
இந்த பள்ளிகளில் படித்த 7 மாணவர்கள் 'நீட்' தேர்வு மூலம் இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 86 மேல்நிலை பள்ளிகளில் 44 பள்ளிகளில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டம் துவங்கப்படவில்லை. இங்கு துவங்கிட வேண்டும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE