பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வார்டு அமைத்த செலவு ரூ.142 கோடி கிடைப்பதில் இழுபறி

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை : அரசு மருத்துவமனைகளில், கொரோனா வார்டு அமைத்ததற்கான, 142 கோடி ரூபாய் கிடைக்காமல், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் தவித்து வருகின்றனர். பொதுப்பணித் துறையின் மருத்துவப் பணிகள் பிரிவு வாயிலாக, மாநிலம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மார்ச் மாதம், கொரோனா பரவல் துவங்கியதை அடுத்து, மாநிலம் முழுதும்,

சென்னை : அரசு மருத்துவமனைகளில், கொரோனா வார்டு அமைத்ததற்கான, 142 கோடி ரூபாய் கிடைக்காமல், பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் தவித்து வருகின்றனர்.

பொதுப்பணித் துறையின் மருத்துவப் பணிகள் பிரிவு வாயிலாக, மாநிலம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. மார்ச் மாதம், கொரோனா பரவல் துவங்கியதை அடுத்து, மாநிலம் முழுதும், அரசு மருத்துவமனைகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை, தனித்தனி கழிப்பறை வசதியுடன், கொரோனா சிறப்பு வார்டுகள், தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டன.

சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டதால், அரசிடம் இருந்து நிதி கிடைக்கும் வரை காத்திருக்காமல், இப்பணிகளை, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, பொதுப்பணித் துறை மேற்கொண்டது.பணி முடித்தவுடன், 'பில்' தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில், ஒப்பந்ததாரர்களிடம் உறுதியளிக்கப்பட்டது. இதற்காக, மாநிலம் முழுதும், 142 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.அதிகபட்சமாக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு, 25 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. ஆகஸ்டில் பணிகள் முடிந்த நிலையில், பில் தொகையை கேட்டு, பொதுப்பணித் துறை அலுவலகங்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் படையெடுத்து வருகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு மேலாகியும், அதை வழங்காமல், பொதுப்பணித் துறையினர் அலைக்கழித்து வருகின்றனர். 'நிதித் துறையின் ஒப்புதல் கிடைக்காததால், பணத்தை வழங்க முடியவில்லை' என்று, அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, இம்மாத இறுதிக்குள் பணத்தை வழங்காவிட்டால், கொரோனா வார்டுகள் பராமரிப்பு பணிகளை நிறுத்த ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டுள்ளனர். இப்பிரச்னையில், முதல்வர் இ.பி.எஸ்., தலையிட்டு தீர்வு காண வேண்டும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X