நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே போலீஸ்காரர் முத்துரமேஷ் 35, வீட்டில் 70 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
மட்டப்பாறையில் குடும்பத்துடன் வசிக்கும் முத்துரமேஷ், நான்கு வழிச்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றுகிறார். சீருடை பணியாளர்கள் தேர்வு ஏற்பாட்டுக்காக திண்டுக்கல்லிற்கு 2 நாட்களுக்கு முன் குடும்பத்தாருடன் சென்று தங்கை வீட்டில் தங்கி இருந்தார். நேற்று மட்டப்பாறை கிராமத்தினர் பூட்டியிருந்த முத்துரமேஷ் வீடு திறந்திருப்பதைக் கண்டு, அவருக்கு தகவல் கூறினர். விளாம்பட்டி போலீசார் பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன.முத்துரமேஷ் வந்து பீரோவில் இருந்த 70 பவுன் நகை, ரூ. 35 ஆயிரத்தை காணவில்லை என புகார் செய்தார்.
டி.எஸ்.பி.,க்கள் (கைரேகை பிரிவு) சையது ரகமத்துல்லா, முருகன் ஆய்வு செய்தனர். எஸ்.ஐ., கண்ணாகாந்தி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE