சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மர்ம மரணம்: ஆர்.டி.ஓ., விசாரணை

Added : டிச 15, 2020
Share
Advertisement
கோத்தகிரி:கோத்தகிரி அருகே, குளியலறையில் பெண் இறந்து கிடந்தது குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், அதிகாரிபட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நதியா,34, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்து, மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.இவர்கள், கோத்தகிரி குப்பட்டிக்கம்பை பகுதியில் தங்கி,வேலை செய்து

கோத்தகிரி:கோத்தகிரி அருகே, குளியலறையில் பெண் இறந்து கிடந்தது குறித்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், அதிகாரிபட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நதியா,34, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்து, மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.இவர்கள், கோத்தகிரி குப்பட்டிக்கம்பை பகுதியில் தங்கி,வேலை செய்து வந்தார். கடந்த, 11ம் தேதி சக்திவேல் சேலம் சென்ற நிலையில், நதியா தனது மகனுடன், உறவினரான விமலா வீட்டுக்கு சென்றுள்ளார்.நேற்று காலை, 6.00 மணிக்கு குளிப்பதற்காக, குளியல் அறைக்கு சென்ற நதியா, தரையில் விழுந்து இறந்து கிடந்துள்ளார்.போலீசார் உடலை கைப்பற்றி, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X