பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர் மட்டம் 27 மாவட்டங்களில் சரிவு

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை : அதிக நுகர்வு காரணமாக, 27 மாவட்டங்களில், கடந்தாண்டை காட்டிலும், நிலத்தடி நீர் இருப்பு குறைந்துள்ளது. பொதுப்பணி துறையின் கீழ் இயங்கும், மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் வாயிலாக, மாநிலம் முழுதும், ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மாதமும், இந்த கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. தனியாரிடமும், இந்த

சென்னை : அதிக நுகர்வு காரணமாக, 27 மாவட்டங்களில், கடந்தாண்டை காட்டிலும், நிலத்தடி நீர் இருப்பு குறைந்துள்ளது.

பொதுப்பணி துறையின் கீழ் இயங்கும், மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் வாயிலாக, மாநிலம் முழுதும், ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மாதமும், இந்த கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. தனியாரிடமும், இந்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.நவம்பரில், சென்னையை தவிர்த்து மீதமுள்ள, 36 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த ஆண்டை காட்டிலும், 27 மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, திருநெல்வேலியில், 3.24 மீட்டர்; தென்காசியில், 2.81 மீட்டர்; விழுப்புரத்தில், 2.42 மீட்டர்; திருவண்ணாமலையில், 2.22 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் இருப்பு குறைந்துள்ளது. அதே நேரத்தில், கடந்தாண்டை காட்டிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், 0.62 மீட்டர்; தர்மபுரியில், 0.61 மீட்டர்; திருச்சியில், 0.42 மீட்டர்; கரூரில், 1.15 மீட்டர்; மதுரையில், 0.02 மீட்டர். சிவகங்கையில், 1.22 மீட்டர்; தேனியில் 1.77 மீட்டர், கள்ளக்குறிச்சியில் 0.77 மீட்டர், திருப்பத்துாரில், 0.20 மீட்டர் அளவிற்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

சாகுபடி, குடிநீர், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு, நிலத்தடி நீர் அதிகம் நுகரப்பட்டதே, இதற்கு காரணம் என, தெரியவந்துள்ளது.வட கிழக்கு பருவ மழையால் உருவான, 'நிவர், புரெவி' புயல் காரணமாக, பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால், பல மாவட்டங்களில் வெள்ளம் வடியாமல் தேங்கி கிடக்கிறது. எனவே, இம்மாத முடிவில் எடுக்கப்படும் ஆய்வில், பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என, பொதுப்பணித் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X