நடிகர் ரஜினி துவக்க உள்ள கட்சியுடன், காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க, ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர், தமிழருவி மணியன் முடிவு செய்துள்ளார்.
நடிகர் ரஜினி, ஜனவரியில் புதிய கட்சி துவக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை, வரும், 31ம் தேதி வெளியிட உள்ளார். கட்சி துவக்கியதும், மாநில, மாவட்ட செயலர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.தற்போது, ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள நிர்வாகிகள், புதிதாக கட்சியில் சேர்வோர், மாற்று கட்சிகளிலிருந்து வருவோருக்கு, தகுதி அடிப்படையில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நிர்வாகிகளை நியமிக்க, ரஜினி முடிவு செய்துள்ளார்.
![]()
|
தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்தில், மாநில நிர்வாகிகள், வருவாய் மாவட்ட அடிப்படையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுதும் ஏராளமானோர் உள்ளனர்.அவர்கள் அனைவரும், ரஜினி கட்சி துவக்குகிற மாநாட்டில் இணைய திட்டமிட்டுள்ளனர். இந்த இணைப்புக்கு பின், காந்திய மக்கள் இயக்க நிர்வாகிகளும், ரஜினி கட்சியின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக, மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE