பொது செய்தி

தமிழ்நாடு

'9 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.7,168 கோடி பயிர் கடன்'

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை : ''நடப்பு நிதியாண்டில் இதுவரை, 9.36 லட்சம் விவசாயிகளுக்கு, 7,168 கோடி ரூபாய் வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார். சென்னை, தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை செயல்பாடு தொடர்பாக, அமைச்சர் ராஜு, துறையின் உயரதிகாரிகளுடன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், அமைச்சர் ராஜு பேசியதாவது:போதிய அளவு பருவ மழை

சென்னை : ''நடப்பு நிதியாண்டில் இதுவரை, 9.36 லட்சம் விவசாயிகளுக்கு, 7,168 கோடி ரூபாய் வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

சென்னை, தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை செயல்பாடு தொடர்பாக, அமைச்சர் ராஜு, துறையின் உயரதிகாரிகளுடன், நேற்று ஆய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், அமைச்சர் ராஜு பேசியதாவது:போதிய அளவு பருவ மழை பெய்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன், விதைகள், உர வகைகள், பூச்சி கொல்லி மருந்துகள் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்து, உரிய இழப்பீடு வழங்குவது போன்ற நடவடிக்கைகளை, அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

நடப்பு நிதியாண்டில், டிசம்பர், 7 வரை, 9.36 லட்சம் விவசாயிகளுக்கு, 7,168 கோடி ரூபாய் அளவிற்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு, இதே கால கட்டத்தில் வழங்கியதை விட, 1,098 கோடி ரூபாய் அதிகம்.தற்போது, தமிழகம் முழுதும், கூட்டுறவு நிறுவனங்களில், 33 ஆயிரத்து, 774 டன் யூரியா; 16 ஆயிரத்து, 576 டன் டி.ஏ.பி., உட்பட, 86 ஆயிரத்து, 835 டன் உர வகையில் கையிருப்பில் உள்ளன; தேவையான அளவு இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X