பொது செய்தி

தமிழ்நாடு

அண்டை மாநிலங்களுக்கு காய்கறி 'சப்ளை'

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை : அடுத்தாண்டு முதல், அண்டை மாநிலங்களுக்கு காய்கறி சப்ளை செய்யும் வகையில், உற்பத்தியை அதிகரிக்க, தோட்டக்கலைத் துறை முடிவெடுத்து உள்ளது. பல்வேறு மாவட்டங்களில், காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பொருட்கள் சாகுபடி நடக்கிறது. உற்பத்தி போதுமான அளவில் இல்லை.எனவே, காய்கறிகள் சாகுபடியை அதிகரிப்பதற்கான, தீவிர முயற்சியில் தோட்டக்கலைத் துறை

சென்னை : அடுத்தாண்டு முதல், அண்டை மாநிலங்களுக்கு காய்கறி சப்ளை செய்யும் வகையில், உற்பத்தியை அதிகரிக்க, தோட்டக்கலைத் துறை முடிவெடுத்து உள்ளது.

பல்வேறு மாவட்டங்களில், காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பொருட்கள் சாகுபடி நடக்கிறது. உற்பத்தி போதுமான அளவில் இல்லை.எனவே, காய்கறிகள் சாகுபடியை அதிகரிப்பதற்கான, தீவிர முயற்சியில் தோட்டக்கலைத் துறை இறங்கியுள்ளது. குறிப்பாக, காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட தோட்டக்கலை பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யாத மாவட்டங்களில், உற்பத்தியை அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு மானிய விலையில், விதைகள், நுண்ணுாட்ட சத்துக்கள், சாகுபடிக்கான இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்படுகின்றன.

நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், இலவச கட்டமைப்புகள் அமைத்து தரப்படுகின்றன. இந்நிலையில், தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் தலைமையில், அனைத்து மாவட்ட துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.தமிழகத்தில் இருந்து, கேரளாவிற்கு காய்கறிகள் எடுத்து செல்லப்படுகிறது. அடுத்தாண்டு முதல், மற்ற அண்டை மாநிலங்களுக்கும், காய்கறிகள் சப்ளை செய்யும் வகையில், உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளில் கவனம் செலுத்த தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், உதவி அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிதியில் செயல்படுத்தப் படும் தோட்டக்கலை திட்டங்களின் இலக்கை அடைய, உரிய கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X