விருதுநகர் : விருதுநகரில் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடம் பணம் கைப்பற்றிய நிலையில் அவரது வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.6.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் சூலக்கரையில் இருந்து சொந்த ஊர் செல்ல கார்களில் புறப்பட்ட வாகன ஆய்வாளர்கள், இடைத்தரகர் என மூவரை டிச., 12ல் சோதித்ததில் ரூ.25 லட்சத்து 66 ஆயிரத்து 880 பறிமுதல் செய்யப்பட்டது.இதில் தொடர்புடைய விருதுநகர் வாகன ஆய்வாளர் கலைசெல்வியின் சொந்த ஊரான சேலம் சங்ககிரி, மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் சொந்த ஊரான நாமக்கல் நள்ளிப்பாளையம் பாரதிதாசன் நகர் வீடுகளிலும் சோதனை நடந்தது. இதில் சண்முக ஆனந்த் வீட்டில் ரூ.6 லட்சத்து 46 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. ஆய்வாளர்கள் கலைச்செல்வி, சண்முக ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE