பொது செய்தி

தமிழ்நாடு

2,000 இடங்களில் 'அம்மா மினி கிளினிக்' துவக்கம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை : தமிழகம் முழுதும், 2,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, 'அம்மா மினி கிளினிக்' என்ற, மருத்துவ சேவை வசதியை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார். சென்னை மாநகராட்சியின், ராயபுரம் மண்டலம், ஷேக் மேஸ்திரி தெரு; தண்டையார் பேட்டை மண்டலம், வியாசர்பாடி, எம்.பி.எம்., தெரு; தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர் கச்சேரி சாலை ஆகிய இடங்களில், 'அம்மா மினி கிளினிக்'குகள்

சென்னை : தமிழகம் முழுதும், 2,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, 'அம்மா மினி கிளினிக்' என்ற, மருத்துவ சேவை வசதியை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சியின், ராயபுரம் மண்டலம், ஷேக் மேஸ்திரி தெரு; தண்டையார் பேட்டை மண்டலம், வியாசர்பாடி, எம்.பி.எம்., தெரு; தேனாம்பேட்டை மண்டலம், மயிலாப்பூர் கச்சேரி சாலை ஆகிய இடங்களில், 'அம்மா மினி கிளினிக்'குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றையும், மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ள, 2,000 மினி கிளினிக்குகளையும், முதல்வர் இ.பி.எஸ்., நேற்று துவக்கி வைத்தார்.ராயபுரத்தில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழகம் முழுதும் கிராமப்புறங்களில் உள்ள, ஏழை மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக, 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

மேலும், 30 படுக்கைகள், 'ஸ்கேன்' வசதிகளுடன், 166 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நிலை உயர்த்தப்பட்டன.தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகளை விட, கூடுதல் வசதிகளை, அரசு மருத்துவமனைகளில், செயல்படுத்தி வருகிறோம். புதிதாக, 11 மாவட்டங்களில், 3,995 கோடி ரூபாய் மதிப்பில், 11 அரசு மருத்துவ கல்லுாரிகள் உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றில், 1,650 டாக்டர்கள் புதிதாக மருத்துவம் படிக்கும் சூழ்நிலையை, அரசு ஏற்படுத்தி உள்ளது.கடந்த, 2011 வரை, 1,945 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. தற்போது, 5,300 பேர், மருத்துவம் படிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள், மருத்துவம் படிக்க, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு, அரசு பள்ளிகளில் படித்து, 'நீட்' தேர்ச்சி பெற்ற, 313 மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்துள்ளது. இது, வரலாற்று சாதனை.தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல், குறைந்து வருகிறது. தற்போது புதிய முயற்சியாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு, அந்தப் பகுதியிலேயே, சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு, தமிழகம் முழுதும், 'முதல்வரின் அம்மா மினி கிளினிக்'குகள், 2,000 துவக்கப்பட்டுள்ளன.

இவற்றில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இருப்பர். ஏழை மக்கள், தனியார் மருத்துவமனைக்கு சென்றால், 100 அல்லது, 200 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. அந்த சுமை இருக்கக்கூடாது என்பதற்காக, 'அம்மா மினி கிளினிக்'குகள் துவக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு, முதல்வர் பேசினார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: மருத்துவ சேவையை, அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் வகையில், அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி வரும் அம்மாவின் நல் அரசு என்ற நிலை, இன்று உருவாக்கப்பட்டுள்ளது.

'அம்மா மினி கிளினிக்'குகள், தமிழக மருத்துவ சேவை வரலாற்றில்,ஒரு மைல் கல் மட்டுமின்றி, ஜெ., அரசின் சாதனை கிரீடத்தில், ரத்தின கல்லாக பிரகாசிக்கிறது.முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை முறையாக கழுவுதல் போன்றவற்றை, பின்பற்றினால் மட்டுமே, கொரோனா நோய் பரவலை நம்மால் தடுக்க முடியும். பொதுமக்கள் இவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, பன்னீர்செல்வம் பேசினார்.விழாவில், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார், விஜயபாஸ்கர், சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X