சென்னை : கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட நர்ஸ்கள், பணி நிரந்தரம் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில், கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து, அரசு கட்டடங்கள், தனியார் கல்லுாரி கட்டடங்கள், கொரோனா சிறப்பு மையங்களாக மாற்றப்பட்டன.இவற்றில் பணியாற்ற, 4,000 நர்ஸ்கள், ஆறு மாத கால ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொற்று குறைந்து வருவதால், அவர்களின் பணி காலம் நீட்டிக்கப்படவில்லை. இந்நிலையில், பணி நிரந்தரம் செய்யக்கோரி, ஒப்பந்த நர்ஸ்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில், நர்ஸ்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுக்கு பின், மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இயக்குனரிடம்,மனு அளித்து கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE