சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி நீட் சான்று கொடுத்து மோசடி பரமக்குடி டாக்டர், மாணவிக்கு நோட்டீஸ்

Added : டிச 15, 2020
Share
Advertisement
பரமக்குடி : போலியாக தயாரிக்கப்பட்ட நீட் மதிப்பெண் சான்றிதழை தாக்கல் செய்து மருத்துவக் கல்லுாரியில் சேர முயன்ற பரமக்குடி மாணவி தீக் ஷா, அவரது தந்தை பல் டாக்டர் பாலசந்திரன் விசாரணைக்கு ஆஜராக, நேற்று சென்னை பெரியமேடு போலீசார், பரமக்குடி வந்து நோட்டீஸ் வழங்கினர். தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் சேர நடந்த கவுன்சிலிங்கில், டிச., 7 ல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நேரு

பரமக்குடி : போலியாக தயாரிக்கப்பட்ட நீட் மதிப்பெண் சான்றிதழை தாக்கல் செய்து மருத்துவக் கல்லுாரியில் சேர முயன்ற பரமக்குடி மாணவி தீக் ஷா, அவரது தந்தை பல் டாக்டர் பாலசந்திரன் விசாரணைக்கு ஆஜராக, நேற்று சென்னை பெரியமேடு போலீசார், பரமக்குடி வந்து நோட்டீஸ் வழங்கினர்.

தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் சேர நடந்த கவுன்சிலிங்கில், டிச., 7 ல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நேரு நகரைச் சேர்ந்த மாணவி தீக் ஷா 18, தந்தை பாலசந்திரன் பங்கேற்றனர்.மாணவி தரப்பில் நீட் தேர்வில் 610 மதிப்பெண் பெற்றதாக சான்றிதழ் தாக்கல் செய்தனர். கவுன்சிலிங் அதிகாரிகள் சான்றிதழை ஆய்வு செய்த போது, தீக் ஷா 27 மதிப்பெண் பெற்றது தெரிந்தது.இது குறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன், சென்னை பெரியமேடு போலீசில் புகார் செய்தார்.

தீக் ஷா, பாலச்சந்திரன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று பரமக்குடி வந்த பெரியமேடு போலீசார் இருவர் இன்று (டிச., 15) காலை 10:00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் கொடுக்க பாலச்சந்திரன் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் தீக் ஷா, பாலச்சந்திரன் இல்லாததால், பாலச்சந்திரனின் தாயார் மீராவிடம் கொடுத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X