சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை

Added : டிச 15, 2020
Share
Advertisement
சென்னை : சென்னையில், சுற்றுச்சூழல் அதிகாரி வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, 56 லட்சத்து, 13 ஆயிரத்து, 160 ரூபாயை பறிமுதல் செய்தனர். சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்ககம் செயல்படுகிறது. இங்கு, ஆறு, ஏரி மாசுபடுதல் தடுத்தல் மற்றும் கடற்கரை பகுதி மேலாண்மை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த

சென்னை : சென்னையில், சுற்றுச்சூழல் அதிகாரி வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, 56 லட்சத்து, 13 ஆயிரத்து, 160 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்ககம் செயல்படுகிறது. இங்கு, ஆறு, ஏரி மாசுபடுதல் தடுத்தல் மற்றும் கடற்கரை பகுதி மேலாண்மை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பாண்டியன் பணிபுரிகிறார். இவர், லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வருவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை, பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் இயக்ககத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பாண்டியன் அலுவலகத்தில், 88 ஆயிரத்து, 500 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

பின், சென்னை, சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள, அவரது வீட்டில் சோதனையிட்டு, 50 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். தொடர்ந்து சோதனை நடக்கிறது.அதேபோல, துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்து, 3 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதே அலுவலக வளாகத்தில், 'லஞ்ச் பேக்'கில், 9,160 ரூபாயை கைப்பற்றினர்.காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில், 1 லட்சத்து, 75 ஆயிரத்து, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

நேற்று இரவு, 9:00 மணி வரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 56 லட்சத்து, 13 ஆயிரத்து, 160 ரூபாயை பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், வல்லம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தி, 73 ஆயிரத்து, 200 ரூபாயை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 66 ஆயிரத்து, 30 ரூபாய்; வேலுார் வாணியம்பாடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், 94 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. நேற்று ஒரு நாள் மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 58 லட்சத்து, 46 ஆயிரத்து, 390 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X