பொது செய்தி

இந்தியா

கணவர் இறந்ததால் கலங்கவில்லை!

Added : டிச 15, 2020
Share
Advertisement
கணவர் இறந்ததும், வாழ்க்கையே முடிந்து விட்டது என கருதி, பெண்கள் பலர் முடங்கி வரும் நிலையில், கணவர் செய்த தொழில்களை ஏற்று நடத்தி, வெற்றிகரமாக வலம் வரும், திருச்சி மாவட்டம், துறையூரை பூர்வீகமாக கொண்ட சுபத்ரா, ௪௪: நான், எம்.காம்., படித்துள்ளேன். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன், எனக்கு இனிய கணவராக கோபாலகிருஷ்ணன் இருந்தார். அவர், பஸ் தொழில், விவசாயம் என, பரபரப்பாக இயங்கிக்

கணவர் இறந்ததும், வாழ்க்கையே முடிந்து விட்டது என கருதி, பெண்கள் பலர் முடங்கி வரும் நிலையில், கணவர் செய்த தொழில்களை ஏற்று நடத்தி, வெற்றிகரமாக வலம் வரும், திருச்சி மாவட்டம், துறையூரை பூர்வீகமாக கொண்ட சுபத்ரா, ௪௪: நான், எம்.காம்., படித்துள்ளேன். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன், எனக்கு இனிய கணவராக கோபாலகிருஷ்ணன் இருந்தார்.

அவர், பஸ் தொழில், விவசாயம் என, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். நான், வீடு மட்டும் தான் என் உலகம் என, வீட்டிலேயே அமைதியாக இருந்தேன். கடந்த, ௨௦௦௮ல் என் கணவர் திடீரென, மாரடைப்பால் இறந்து விட, ௭ வயது மகனுடன் தனிமையில் விடப்பட்டேன். எங்கள் குடும்பத்திலிருந்து எங்கள் பங்காக, கொஞ்சம் நிலமும், ஒரு பஸ்சும் பிரித்து கொடுத்தனர். அதற்கு முன், அந்த தொழில்கள் பற்றி எதுவும் எனக்கு தெரியாது. எனினும், கணவர் பிரிவை நினைத்து கலங்கி, செயல்படாமல் இருந்தால் சரிப்பட்டு வராது என எண்ணி, என்னை நானே தேற்றிக் கொண்டு, தொழில்களில் தைரியமாக இறங்கினேன்.பஸ் சர்வீஸ் மூலம் தினசரி வசூல் மற்றும் பஸ்கள் பராமரிப்பு என, ஒவ்வொன்றாக கற்றுக் கொள்ள துவங்கினேன். எங்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

அது, எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. கொஞ்ச காலத்திலேயே, தொழில்கள் குறித்து, நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டது.கூடுதல் பஸ்களை வாங்கி, எங்கள் வழித்தடத்தில் விட்டேன்; லாரிகளை இயக்கினேன். வெற்றிகரமாக அவற்றை இன்னமும் பராமரித்து வருகிறேன். அதுபோல, அதுவரை எனக்கு தெரியாமல் இருந்த விவசாயத்தையும், படிப்படியாக கற்கத் துவங்கினேன். கணவர் உயிருடன் இருந்த போது, வயல்களில், ஆந்திரா பொன்னி நெல் பயிரிட்டு வந்தார். ரசாயன உரங்களைத் தான் பயன்படுத்தினார்.அவருக்கு பின் பொறுப்பேற்ற நான், முழுவதும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய விரும்பினேன்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறிவுறுத்தல்படி, ரசாயன பயன்பாட்டி லிருந்து, எங்கள் மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என உறுதியாக நினைத்தேன்.கால்நடைகளின் இயற்கை உரம், மண்புழு உரம், தக்கைப்பூண்டு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல், மீன் அமிலம் என மண்ணில் இட்டு, மண்ணை செழுமையாக்கினேன். பாரம்பரிய நெல் வகைகளை மட்டுமே பயிரிடுகிறேன். லாபம் பெரிதாக கிடைப்பது இல்லை. எனினும், மண்ணை பொன்னாக மாற்றியுள்ளேன் என்ற திருப்தி உள்ளது.இப்போது பஸ் தொழில் மற்றும் இயற்கை விவசாயத்தில் அத்துபடியாகி விட்டேன். எனக்கு உறுதுணையாக என் மகன் உள்ளான்; என் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X