தொழிலாளர் வன்முறை ரூ.437 கோடி இழப்பு

Added : டிச 15, 2020
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடகாவில், 'விஸ்ட்ரான்' நிறுவன தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், 437 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக, அந்நிறுவனம் போலீசில் புகார் அளித்து உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோலார் மாவட்டம், நரசபுரா நகரில், தைவானைச் சேர்ந்த, விஸ்ட்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. 'ஆப்பிள்' நிறுவனத்தின்,

பெங்களூரு : கர்நாடகாவில், 'விஸ்ட்ரான்' நிறுவன தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், 437 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக, அந்நிறுவனம் போலீசில் புகார் அளித்து உள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோலார் மாவட்டம், நரசபுரா நகரில், தைவானைச் சேர்ந்த, விஸ்ட்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. 'ஆப்பிள்' நிறுவனத்தின், 'ஐபோன்' பாகங்கள், 'லெனோவா, மைக்ரோசாப்ட்' நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவை, இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.இங்கு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊதிய பிரச்னை கோரி, சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்தது. இதில், தொழிற்சாலை கட்டடம் இடித்து சேதப்படுத்தப்பட்டது;

வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன; விலை உயர்ந்த இயந்திரங்கள், ஸ்மார்ட் போன்கள் சேதப்படுத்தப்பட்டன. இது குறித்து, விஸ்ட்ரான் நிறுவனத்தின் செயல் தலைவர் பிரசாந்த், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தொழிற்சாலையை சேதப்படுத்தியதால், 437 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X