வாஷிங்டன் : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான, தஹாவூர் ராணாவுக்கு ஜாமின் வழங்க, அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த, 2008 டிச., 26ல், மும்பையின் பல்வேறு இடங்களில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஆறு அமெரிக்கர்கள் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய, அமெரிக்காவில் வசித்து வந்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, டேவிட் கோலமன் ஹெட்லி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில், அப்ரூவராக மாறிய அவருக்கு, 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது நெருங்கிய நண்பரான, கனடாவைச் சேர்ந்த தஹாவூர் ராணா மீதும், மும்பை தாக்குதல் தொடர்பாக, இந்தியாவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த, 2009ல், ராணாவும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி, அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், ஜாமின் கேட்டு, ராணா சார்பில், லாஸ் ஏஞ்சலசில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்க மறுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE