டில்லியில் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 15, 2020
Share
Advertisement
புதுடில்லி : மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில் நடந்து வரும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், விவசாயிகளுக்கு ஆதரவாக, நேற்று உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக, டில்லியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

புதுடில்லி : மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லியில் நடந்து வரும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், விவசாயிகளுக்கு ஆதரவாக, நேற்று உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.

போராட்டம் காரணமாக, டில்லியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. துணை ராணுவப் படைமத்திய அரசு அமல்படுத்திய, மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள், டில்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சுகளில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, டில்லியின் எல்லைப் பகுதிகளில், 19வது நாளாக, நேற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது.

டில்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று முன் தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, ஹரியானா - ராஜஸ்தான் எல்லையில், போலீசார் தடுத்து நிறுத்தினர்.டில்லி எல்லை முழுதும், நேற்று இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. சிங்கூ எல்லையில் உள்ள போராட்ட களத்தில், முதல்கட்ட பாதுகாப்பாக, தடுப்புகள் உருவாக்கப்பட்டன. அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரண்டாம் கட்ட பாதுகாப்பு அரணாக, விரைவு அதிரடி படையினர், தடுப்புகளை அமைத்து, பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

அவர்களுடன், துணை ராணுவப் படை பாதுகாப்பும் போடப்பட்டது. சிங்கூ, அவுசாண்டி, பியாவ் மணியாரி, சபோலி மற்றும் மங்கேஷ் எல்லைகள் மூடப்பட்டன.மாற்று பாதைமக்கள், மாற்றுப் பாதையில் பயணிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். காஸியாப்பூர் எல்லை மூடப்பட்டது. இதனால், காஸியாபாத்தில் இருந்து டில்லிக்கு செல்லும் மக்கள் போக்குவரத்து தடைபட்டது. மக்கள் மாற்று பாதைகளில் பயணித்து டில்லியை அடைந்தனர்.இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், விவசாய சங்கத்தினர், நேற்று காலை, 8:00 மணி முதல், உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். இரவு, 8:00 மணி வரை, இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தது.நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.மனு தாக்கல்இது குறித்து, அவர் கூறியதாவது:உண்ணாவிரதம் புனிதமானது. நம் விவசாய சகோதரர்களுக்காக, அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தபடி, உண்ணாவிரதத்தில் ஈடுபட வேண்டும். இந்த போராட்டம் வெற்றி பெற கடவுளை பிரார்த்திக்க வேண்டும்.இறுதியில், விவசாயிகள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.டில்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.இதற்கிடையே, விவசாயிகளின் போராட்டத்தால், டில்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, சட்டக் கல்லுாரி மாணவர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிடும்படி, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நாளை விசாரணைக்கு வரவுள்ளது. போராட்டம் முடிவுக்கு வரும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை - நமது டில்லி நிருபர் -மத்திய விவசாயத்துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நரேந்திரசிங் தோமர், நேற்று டில்லியில் கூறியதாவது:விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்காக போராடுவதில் தவறில்லை. அதேசமயம், வேளாண் சட்டங்களின் அவசியத்தை அவர்கள் உணர வேண்டும்.விவசாயப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில், பிரச்னையை முழுவதுமாக விளக்கவோ, புரிந்து கொள்ளவோ மறுக்கின்றனர்.இப்போதும்கூட எனக்கு நம்பிக்கை உள்ளது. வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, விரைவில் போராட்டம் முடிவுக்கு வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையில், அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான புபீந்தர்சிங் மான் தலைமையில், தமிழகம், கேரளா, உ.பி., உட்பட, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 17க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், அமைச்சர் நரேந்திரசிங் தோமரை, நேற்று சந்தித்தனர்.இன்னும் சில நாட்களில், பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்திக்கவும் ஏற்பாடு செய்வதாக, விவசாய பிரதிநிதிகளிடம், அமைச்சர் நரேந்திரசிங் தோமர் வாக்குறுதி அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடா பிரதமருக்கு கண்டனம்டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு, வட அமெரிக்க நாடான, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சமீபத்தில் ஆதரவு தெரிவித்தார்.இந்த செயலுக்கு, 'இந்தியன் அம்பாசிடர்ஸ் குரூப்' எனப்படும், முன்னாள் துாதர்கள் குழுவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள திறந்த மடலில் குறிப்பிடப்பட்டுஉள்ளதாவது:கனடாவின் சில அரசியல் தலைவர்களின் ஓட்டு அரசியல் லாபத்திற்காக, அவர்கள் பேசும் பேச்சுகள், இந்தியா - கனடா இடையிலான இருதரப்பு உறவில், பாதிப்பை ஏற்படுத்த கூடும். கனடாவில் உள்ள, காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள், தங்கள் சுய லாபத்திற்காக, இந்தப் போராட்டத்தை துாண்டிவிடுகின்றனர்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X