அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : ரஜினியின் 'திரிகரண சுத்தி!'

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (34)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ்.ரவிசங்கர், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திரிகரணசுத்தி' என்ற வார்த்தை, நம் கலாசாரத்தில் உள்ளடங்கி உள்ளது. மனிதனின் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என, பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணம் ஒன்று; பேச்சு வேறொன்று; செயல்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.ரவிசங்கர், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திரிகரணசுத்தி' என்ற வார்த்தை, நம் கலாசாரத்தில் உள்ளடங்கி உள்ளது. மனிதனின் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என, பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணம் ஒன்று; பேச்சு வேறொன்று; செயல் பிறிதொன்றாக இருந்தால், மனிதன் முன்னேற முடியாது. 'ஊழலில் திளைக்கும் கருணாநிதியிடம் இருந்து, தமிழகத்தை மீட்க வேண்டும்' என்ற எண்ணம், எம்.ஜி.ஆருக்கு இருந்தது. இதையடுத்து, 1972ல், அ.தி.மு.க.,வை துவங்கினார். அவரது பேச்சும், கருணாநிதியின் ஊழலுக்கு எதிராகவே இருந்தது. அதையொட்டியே, அவரின் செயலும் இருந்தது.latest tamil newsஅதனால் தான், 1977 முதல், இறக்கும் வரை, தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார். நடிகர் ரஜினியின் எண்ணம், சொல், செயல் ஆகியவை ஒருங்கிணைந்து இருக்கிறது. அவர் சொன்ன சில கருத்துகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம். இருப்பினும், அதில் உண்மை இருந்தது, கண்கூடு. 'தமிழகத்தில், மாற்றம் என்பது தற்போது இல்லை என்றால், எப்போதும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை' என்ற, ரஜினியின் கருத்து யதார்த்தமே. தமிழக அரசியலில், 1967ல் ஏற்பட்ட மாற்றத்திற்கு, அண்ணாதுரை காரணம். 1977ல், எம்.ஜி.ஆர்., ஏற்படுத்திய மாற்றத்தால், 'கடவுள் எதிர்ப்பு' என்ற ஆயுதத்தின் கூர்மை கணிசமாக குறைக்கப்பட்டது.


latest tamil newsதி.மு.க., மட்டும், ஹிந்து மத வெறுப்பில் இருந்து மாறவே இல்லை. மதசார்பின்மை என்பது, அக்கட்சியில் இல்லை. ஆன்மிகம் என்பது, மத எல்லையை கடந்து நிற்கும் விஷயம். அதை, ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தம் என, பார்க்கக் கூடாது. ஊழலற்ற, நேர்மையான, ஆன்மிக அரசியல் நிச்சயம், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்; ஏற்படுத்த வேண்டும்.


Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
16-டிச-202007:26:45 IST Report Abuse
a natanasabapathy பள்ளி கட்டணம் சினிமா எடுக்க வாங்கி கடன் ஆகியவற்றை கொடுக்காமல் நீதிமன்றத்தில் நின்றது தான் திரிகரண சுத்தியா.
Rate this:
Cancel
GnanaKirukkan - Chennai,இந்தியா
16-டிச-202004:11:07 IST Report Abuse
GnanaKirukkan After watching Mahabharath TV series Rajini said Modi looked like Lord Krishna to his eyes. I recomm Vasan eyecare to Rajini for checking his eyes
Rate this:
Cancel
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
16-டிச-202003:00:43 IST Report Abuse
jeya kumar Yokkiyan Rajini Ellam sombunga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X