சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு ; ரூ.6.46 லட்சம் பறிமுதல் : இன்றைய 'கிரைம் ரவுண்ட்அப்'

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
01. தொழிலாளர் வன்முறை ரூ.437 கோடி இழப்புபெங்களூரு : கர்நாடகாவில், 'விஸ்ட்ரான்' நிறுவன தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், 437 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக, அந்நிறுவனம் போலீசில் புகார் அளித்து உள்ளது.02. மணக்குள விநாயகர் தங்கத்தேர் பாகம் மாயம்புதுச்சேரி : 'மணக்குள விநாயகர் கோவில் தங்கத் தேரின் பாகங்களை மீட்டு தர வேண்டும்' என, கவர்னருக்கு கோரிக்கை

01. தொழிலாளர் வன்முறை ரூ.437 கோடி இழப்பு

பெங்களூரு : கர்நாடகாவில், 'விஸ்ட்ரான்' நிறுவன தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், 437 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக, அந்நிறுவனம் போலீசில் புகார் அளித்து உள்ளது.latest tamil news
02. மணக்குள விநாயகர் தங்கத்தேர் பாகம் மாயம்

புதுச்சேரி : 'மணக்குள விநாயகர் கோவில் தங்கத் தேரின் பாகங்களை மீட்டு தர வேண்டும்' என, கவர்னருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

03. மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவுக்கு ஜாமின் மறுப்பு

வாஷிங்டன் : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான, தஹாவூர் ராணாவுக்கு ஜாமின் வழங்க, அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.


latest tamil news

தமிழக நிகழ்வு01. விருதுநகர் : விருதுநகரில் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடம் பணம் கைப்பற்றிய நிலையில் அவரது வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.6.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

02. நகை வாங்கி மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர் விஜயராஜனை போலீசார் கைது செய்தனர்.

03. ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச்சூடு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். மேலும் 4 படகையும், 27 மீனவர்களையும் கைது செய்தனர்.


latest tamil news
04. அரசு பஸ்சில் ரூ.20 லட்சம் 38 பவுன் நகை பறிமுதல்

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட எல்லை களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அரசு பஸ்சில் திருச்சூர் சாலக்குடி ராஜீவ் 49, என்பவரது பையில் இருந்து 20 லட்சம் ரூபாய், 38 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

05. விளாத்திகுளத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு

துாத்துக்குடி : விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 3,49 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

06. கோவையில் ரவுடி கொலை: மூவர் சரண்

கோவை:கோவையில் ரவுடியை வெட்டிக் கொன்ற மூவர் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர். மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

07. 2.4 கிலோ கடத்தல் தங்கம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சென்னை : துபாயில் இருந்து, இரு விமானங்களில் கடத்தி வரப்பட்ட, 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


உலக நடப்பு01. தலிபான் பயங்கரவாதிகள் கைது

லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் வெடிகுண்டு வீசப்பட்டது. அதில், குழந்தைகள், பெண்கள் உட்பட, 25 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியோரை கைது செய்ய, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதில் தொடர்புடைய தலிபான் பயங்கரவாதிகள் குறித்த ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, பாக்., பாதுகாப்புப் படையினர், அவர்கள் இருந்த பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர். பின், அங்கு மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகளையும் பிடித்து கைது செய்தனர்.


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran - chennai,இந்தியா
15-டிச-202015:27:14 IST Report Abuse
Ramachandran பாகிஸ்தானியர்களும் முஸ்லீம்கள். ஆப்கானிஸ்தான் தாலிபான்களும் முஸ்லீம்கள். ஒரே மதத்திற்குள் ஏன் சண்டை போடுகின்றனர். மதம் ஓன்று இனம் வேறுவேறு என்பார்கள். இந்து மதத்திலும் ஏன் சாதி சண்டைகள் இன்றும் நடக்கின்றன?. சைவம் வைணவம் சண்டைகள் ஒரு காலத்தில் இருந்தன. ஏன் ஒரே மதத்திற்குள் இனச்சண்டை மொழிச் சண்டை சாதிச் சண்டை ? . இதற்கு முடிவே கிடையாதா? என்று இந்த இனச் சண்டைகளும் சாதிச் சண்டைகளும் மதச் சண்டைகளும் ஒழியுமோ? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தை என்று மெய்ப்படுமோ ? காலம் பதில் சொல்லட்டும் .
Rate this:
Cancel
15-டிச-202012:46:14 IST Report Abuse
சம்பத் குமார் 1). நீதிமன்றங்கள் தலையிட்டு வாகன உற்பத்தியாளர்களே வண்டியை அரசாங்க முறைப்படி பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.2). அதற்கான செலுவுகளை வாகன விற்பனையின் போது வாங்கி கொள்ள வேண்டும். அதற்கான expenditure details வாகன வாங்குபவர்களிடம் காட்டி கையெழுத்து பெற வேண்டும்.3). மத்திய அரசாங்கம் இதற்கான விலையை நிர்ணயிக்க வேண்டும்.4). எல்லா RTO அலுவலகங்களை தனியார்மயம் ஆக்கி விடலாம்.5). குறிப்பிட்ட அலுவலகங்களை நிர்வகிக் வைத்து கொள்ளலாம்.6). திரு எடப்பாடியார் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 7). குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை நிரந்தர பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.8). போக்குவரத்து அமைச்சர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி ஜயா.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
15-டிச-202008:57:27 IST Report Abuse
VENKATASUBRAMANIAN எல்லா வாகன ஆய்வாளர் வீட்டிலும் சோதனை நடத்துங்கள் கோடிக்கணக்கில் சிக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X