01. தொழிலாளர் வன்முறை ரூ.437 கோடி இழப்பு
பெங்களூரு : கர்நாடகாவில், 'விஸ்ட்ரான்' நிறுவன தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், 437 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக, அந்நிறுவனம் போலீசில் புகார் அளித்து உள்ளது.

02. மணக்குள விநாயகர் தங்கத்தேர் பாகம் மாயம்
புதுச்சேரி : 'மணக்குள விநாயகர் கோவில் தங்கத் தேரின் பாகங்களை மீட்டு தர வேண்டும்' என, கவர்னருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
03. மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவுக்கு ஜாமின் மறுப்பு
வாஷிங்டன் : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான, தஹாவூர் ராணாவுக்கு ஜாமின் வழங்க, அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

தமிழக நிகழ்வு
01. விருதுநகர் : விருதுநகரில் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடம் பணம் கைப்பற்றிய நிலையில் அவரது வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.6.46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
02. நகை வாங்கி மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர் விஜயராஜனை போலீசார் கைது செய்தனர்.
03. ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச்சூடு
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். மேலும் 4 படகையும், 27 மீனவர்களையும் கைது செய்தனர்.

04. அரசு பஸ்சில் ரூ.20 லட்சம் 38 பவுன் நகை பறிமுதல்
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட எல்லை களியக்காவிளையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற அரசு பஸ்சில் திருச்சூர் சாலக்குடி ராஜீவ் 49, என்பவரது பையில் இருந்து 20 லட்சம் ரூபாய், 38 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
05. விளாத்திகுளத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு
துாத்துக்குடி : விளாத்திகுளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 3,49 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
06. கோவையில் ரவுடி கொலை: மூவர் சரண்
கோவை:கோவையில் ரவுடியை வெட்டிக் கொன்ற மூவர் போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர். மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
07. 2.4 கிலோ கடத்தல் தங்கம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
சென்னை : துபாயில் இருந்து, இரு விமானங்களில் கடத்தி வரப்பட்ட, 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உலக நடப்பு
01. தலிபான் பயங்கரவாதிகள் கைது
லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் வெடிகுண்டு வீசப்பட்டது. அதில், குழந்தைகள், பெண்கள் உட்பட, 25 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியோரை கைது செய்ய, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதில் தொடர்புடைய தலிபான் பயங்கரவாதிகள் குறித்த ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, பாக்., பாதுகாப்புப் படையினர், அவர்கள் இருந்த பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர். பின், அங்கு மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகளையும் பிடித்து கைது செய்தனர்.
