நடுவீரப்பட்டில் நிகும்பலாயாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடுவீரப்பட்டில் நிகும்பலாயாகம்

Added : டிச 15, 2020
Share
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாள காளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவிலில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாக வேள்வி துவங்கியது. மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம்

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாள காளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவிலில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.

பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு, யாக வேள்வி துவங்கியது. மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது.தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்து யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிேஷகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது.பூஜைக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X