கடலுார்; வீரதீர செயல்களுக்கான வழங்கப்படும் அண்ணா விருது பெற இன்றுக்குள் (15ம் தேதி) விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் சந்திரசேகர சகாமுரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் மூலம், 2021 ம் ஆண்டிற்கான வீர தீர செயல்களுக்கான அண்ணா விருது வழங்கப்படுகிறது.பொதுமக்கள் மற்றும் அரசு துறை சார்ந்த ஊழியர்கள் உயிரை பாதுகாத்தல், அரசு சொத்துக்களை பாதுகாத்தல் போன்றவற்றில் துணிச்சல் மிகுந்த முறையில் வீரதீர செயல் புரிந்தவர்களை பாராட்டும் வகையில், குடியரசு தின விழாவின்போது, தமிழக முதல்வரால் இவ்விருது வழங்கப்படுகிறதுவிருது பெறுவதற்கு தாங்கள் செயல்புரிந்த விபரங்களை தமிழ் மற்றும் ஆங்கில வடிவிலான கருத்துருக்களை மாவட்ட சமூகநல அலுவலகம், அரசு சேவை இல்ல வளாகம், செம்மண்டலம். கடலுார் என்ற முகவரியில் இன்று (15ம் தேதிக்குள்) சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE