நெல்லிக்குப்பம்; விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டத்துக்கு வணிகர்கள் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லிக்குப்பம் நகர வியாபாரிகள் மற்றும் தொழில்புரிவோர் நலசங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ஷேக்தாவூத் தலைமை தாங்கினார். செயலர் பிரபாகரன், சட்ட ஆலோசகர் ராம்சிங் முன்னிலை வகித்தனர். பொருளாளர் துரைகிருஷ்ணா வரவேற்றார்.விழாவில் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நாட்காட்டிகள் வழங்கி பேசிய தாவது:இந்தியாவில் சாதாரண வணிகர்களை அழிக்க பண முதலைகள் முயற்சிக்கின்றனர். நாம் ஒற்றுமையுடன் இருந்து இதை எதிர்கொள்ள வேண்டும். அரசியல் தலைவர்களே நமக்கு எதிராக செயல்படுகின்றனர். நாம் வாங்கும் பொருட்கள் பெரும்பாலானவை அந்நிய நிறுவனங்களுடையதாக உள்ளது. இதன் மூலம் நம் நாட்டை அந்நிய நிறுவனங்களுக்கு பலி கொடுக்கிறோம். எனவே நாட்டை காப்பாற்ற காந்தி வழியில் அந்நிய நிறுவன பொருட்களை புறக்கணித்து தீயிட்டு கொளுத்த உறுதி ஏற்க வேண்டும். இதற்கான இயக்கத்தை அனைவரும் முன்னெடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டத்துக்கு வணிகர்கள் தயாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE