பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப் பொருளான சமுதாய கட்டடம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
சின்னசேலம்; சின்னசேலத்தில் சமுதாயக்கூட கட்டடம் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.சின்னசேலம் நகர பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அம்சாகுளம் பகுதியில் கடந்த 2008 - 09ம் ஆண்டு அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக்கூட கட்டடம் கட்டப்பட்டது.அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு சுப

சின்னசேலம்; சின்னசேலத்தில் சமுதாயக்கூட கட்டடம் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.சின்னசேலம் நகர பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அம்சாகுளம் பகுதியில் கடந்த 2008 - 09ம் ஆண்டு அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக்கூட கட்டடம் கட்டப்பட்டது.அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய கூட்டங்கள் நடத்திக் கொள்வதற்காக கட்டப்பட்ட கட்டடம், கட்டப்பட்ட நாளில் இருந்து காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளது. கட்டடத்தைச் சுற்றிலும் அடர்ந்த புதர் மண்டியுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டிய கட்டடம் மக்கள் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.எனவே, புதர்களை அகற்றி கட்டடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X