பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர தடுப்பு அமைக்கும் பணி

Added : டிச 15, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே சாலையோரத்தில் மெட்டல் கிராஸ் டேரியல் எனப்படும் சாலையோர தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் கிராமத்தில் திருவெண்ணெய்நல்லுார் - உளுந்துார்பேட்டை பிரதான சாலையில் சில மாதங்களுக்கு முன்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதி மேடான சாலை என்பதால், வாகன ஓட்டிகள் இரவு

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே சாலையோரத்தில் மெட்டல் கிராஸ் டேரியல் எனப்படும் சாலையோர தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.உளுந்துார்பேட்டை அடுத்த களமருதுார் கிராமத்தில் திருவெண்ணெய்நல்லுார் - உளுந்துார்பேட்டை பிரதான சாலையில் சில மாதங்களுக்கு முன்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதி மேடான சாலை என்பதால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுவது அதிகரித்து வந்தது.மேலும், அந்த சாலையில் மின் விளக்கு இல்லாததாலும் விபத்துகள் ஏற்பட காரணமாக இருந்தது. இதனால், சாலையில் மின் விளக்குகள் அமைத்து, சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்அதனைத் தொடர்ந்து, அந்த சாலையில் தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, சாலையோரம் மெட்டல் கிராஸ் டேரியல் எனப்படும் தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X