கள்ளக்குறிச்சியில் பா.ம.க.,வினர்மனு கொடுக்கும் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் பா.ம.க.,வினர்மனு கொடுக்கும் போராட்டம்

Added : டிச 15, 2020
Share
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகர பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தனி ஒதுக்கீடு கோரி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக சென்று, மந்தைவெளியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ம.க., நகர செயலாளர் மணி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி நகர பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தனி ஒதுக்கீடு கோரி மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக சென்று, மந்தைவெளியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ம.க., நகர செயலாளர் மணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆறுமுகம், அழகர், சக்திவேல், குமார், செந்தில், குமார், சீனு, வெங்கட், நகர அமைப்பு செயலாளர் நாராயணன், மாநில துணைத் தலைவர் பாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து வி.ஏ.ஓ., அக்பர்பாஷாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோன்று ஏமப்பேர் வி.ஏ.ஓ., அலுவலகம் முன் போராட்டம் நடந்தது. நகர தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.உளுந்துார்பேட்டைஎலவனாசூர்கோட்டை வி.ஏ.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இடஓதுக்கிடு வழங்ககோரி மனு அளித்தனர். ஒன்றிய செயலாளர் பழனி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ரிஷிவந்தியம்வி.ஏ.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ம.க., மாநில மருத்துவரணி செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் அமுதமொழி முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் வேல்முருகன், ஒன்றிய வன்னியர் சங்க செயலாளர் சரவணன், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் மணி, நிர்வாகிகள் வெங்கடேசன், செந்தில், பிரபா, சுந்தர்ராஜ், அழகுராஜா, செல்வம், ரவி, ஆனந்தகுமார், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வி.ஏ.ஓ., சைமன்குமாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X