கள்ளக்குறிச்சி;கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று 15 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனையொட்டி, மார்க்கெட் கமிட்டிக்கு மக்காச்சோளம் மூட்டைகளின் வரத்து அதிகரித்துள்ளது.நேற்று கமிட்டிக்கு மக்காச்சோளம் 600 மூட்டைகள், வேர்க்கடலை 84 மூட்டைகள், கம்பு 50 மூட்டைகள், எள் 4 மூட்டைகள், உளுந்து 1 மூட்டை கொண்டு வரப்பட்டன.சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 1,425 ரூபாய்க்கும், வேர்க்கடலை 5,900, கம்பு 2,612, எள் 5,283, உளுந்து 5,899 ரூபாய்க்கும் விலை போனது. கமிட்டிக்கு 125 விவசாயிகள் கொண்டு வந்த 789 மூட்டை விளை பொருட்கள் 15 லட்சம் ரூபாயக்கு கொள்முதல் செய்யப்பட்டது.சின்னசேலம்சின்னசேலம் மார்க்கெட் கமிட்டிக்கு, சுற்றுவட்டார கிரமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் அறுவடை செய்த எள், மக்காச்சோளம், வேர்க்கடலை, ஆமணக்கு, கேழ்வரகு போன்ற பயிர்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக 510 மூட்டை மக்காச்சோளம் கொண்டு வரப்பட்டன. ஒரு மூட்டை அதிகபட்சமாக 1,516 ரூபாய், குறைந்தபட்சம் 899 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது. 510 மூட்டைகள் 7 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE