திருவெண்ணெய்நல்லுார்; கிருபாபுரீஸ்வரர் கோவிலில் நேற்று சனிபிரதோஷ விழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்காளம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் கடந்த 12ம் தேதி சனிபிரதோஷத்தன்று நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, உள்ளிட்ட திரவியங்களில் அபிேஷகம் நடத்தது. விழாவில் பெற்றோர் ஆசரியர் கழக தலைவர் சரவணக்குமார், கடலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக சிஸ்டம் மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி அவர்களது குடும்பத்தினர், கோவிலில் உள்ள நந்திபகவான் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் புதியதாக செய்யப்பட்ட வெள்ளி கவசத்தை கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ் ஆகியோரிடம் வழங்கினர். கவசத்தை நந்திபகவானுக்கும், சுந்தரமூர்த்திநாயனாருக்கும் சாத்துபடிசெய்யப்பட்ட பின் மகா தீபாராதனை நடத்தப்பட்டது.உற்சவர் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தபின் சிறப்பு தீபாராதனை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE