செஞ்சி; வராக நதி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யாத தால் இரண்டாவது ஆண்டாக மணல் மூட்டைகளை கொண்டுதற்காலிகமாக சரி செய்துள்ளனர்.செஞ்சியை அடுத்த செவலபுரை கிராமத்தில் வராக நதி குறுக்கே தடுப்பணை கட்டி உள்ளனர். இதில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்துள்ளனர். இதன் மூலம் செல்லபிராட்டி, மேல்களவாய், காரியமங்கலம், பெரும்புகை, ஆனந்தூர் எனஐந்து பொதுப்பணித்துறை ஏரிகளுக்கும், 11 ஒன்றிய ஏரிகளுக்கும் தண்ணீர் செல்கிறது.இந்த ஏரிகள் மூலம் 2400 ஏக்கர் நிலங்கள்பாசன வசதி பெறுகின்றன.இந்த வாய்க்காலில் ஏற்பட்ட குறைபாடுகள் காரமணாக தண்ணீர் செல்லாமல் இருந்தது. எனவே 2016ஆம் ஆண்டு 10 கோடி ரூபாய் மதிப்பில் 5.2 கிலோ மீட்டர் தூரத்திற்கான கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றினர். இந்த பணி 2017 ஆம் ஆண்டு முடிந்தது.இதன் பிறகு கடந்த ஆண்டு மழையின் போது தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்த போது தண்ணீரின் அழுத்தம் காரணமாகஅணையில் இருந்து இரண்டாவது கிலோ மீட்டரில், அன்னமங்கலம் ஏரி உபரி நீர் செல்லும் ஓடையின் மேல் உள்ள உயர்மட்டகால்வாயில் 10 மீட்டம் துாரத்திற்கு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.இதில் இருந்து தண்ணீர் மீண்டும் வராக நதியில் கலந்தது. இந்த உடைப்பை மூன்று நாட்கள் இரவு பகலாக பணி செய்து 3000 மணல்மூட்டைகளை கொண்டு சரி செய்தனர். இதற்கு நிரந்தர தீர்வாக 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.பொதுப்பணித்துறை இதற்கு நிதி ஒதுக்காததால் இரண்டாவது ஆண்டாக உடைப்பு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்துமீண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான மணல் மூட்டைகளை கொண்டு தற்காலிகமாக சரிசெய்துள்ளனர்.மிக முக்கியமான இந்த கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்படுவதை தடுக்க புதிதாக சுற்று சுவர் அமைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE