விழுப்புரம்; விழுப்புரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 170 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முருகன், செல்வக்குமார், சகாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., மாவட்ட செயற்குழு ராமமூர்த்தி, இந்திய கம்யூ., மாநிலக்குழு சரவணன் கண்டன உரையாற்றினர்.இதில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மின்சார திருத்தச் சட்டம் 2020ஐ திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்த, போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி, வி.சி., கட்சியினர், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் சிம்கார்டு நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE