பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பி வழியும் புதுகுப்பம் -குதிரைப்பள்ளம் தடுப்பணை

Added : டிச 15, 2020
Share
Advertisement
பொன்னேரி; கட்டி முடிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் முதன் முறையாக, புதுகுப்பம்- குதிரைப்பள்ளம் தடுப்பணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.பொன்னேரி அடுத்த, புதுகுப்பம்- குதிரைப்பள்ளம் கிராமங்களுக்கு இடையே, கொற்றலை ஆற்றின் குறுக்கே, 2018ம் ஆண்டு, 9.90 கோடி ரூபாயில், தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், 335 மீ. நீளம், 1.5 மீ.

பொன்னேரி; கட்டி முடிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் முதன் முறையாக, புதுகுப்பம்- குதிரைப்பள்ளம் தடுப்பணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.பொன்னேரி அடுத்த, புதுகுப்பம்- குதிரைப்பள்ளம் கிராமங்களுக்கு இடையே, கொற்றலை ஆற்றின் குறுக்கே, 2018ம் ஆண்டு, 9.90 கோடி ரூபாயில், தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், 335 மீ. நீளம், 1.5 மீ. உயரத்தில் தடுப்பணை அமைத்து நீர்வரத்திற்கு காத்திருந்தது.அந்த ஆண்டு, மழை குறைவால், தடுப்பணைக்கு நீர்வரத்து இல்லாமல் போனது. 2019ம் ஆண்டும் அதே நிலைதான் தொடர்ந்தது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதி வரை நீர்வரத்து இன்றி தடுப்பணை வறண்டு இருந்தது.கடந்த மாதம், 26ம் தேதி முதல் பெய்த தொடர் மழை, பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் வெளியேற்றம் ஆகியவற்றால் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.நீரின்றி வறண்டு கிடந்த தடுப்பணையில், ஒரு வாரமாக தண்ணீர் நிரம்பி வழிகிறது.தடுப்பணை நிரம்பி வழிவதை கண்ட விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர்.உபரி நீர் கொற்றலை ஆற்றின் வழியாக, வல்லுார் அணைக்கட்டு நோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது.தடுப்பணை நிரம்பி உள்ளதால், 1.5 கி.மீ., தொலைவு சுற்றளவிற்கு நிலத்தடி நீரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்ஜெகன்னாதபுரம், குதிரைப்பள்ளம், பசுவன்பாளையம், நெற்குன்றம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் எனவும், பொதுப்பணித் துறை தெரிவிக்கினறனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X