பொன்னேரி; குப்பை கழிவுகளால், மாசடைந்துவரும் அகத்தீஸ்வரர் கோவில் குளத்திறகு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவில் முகப்பில், ஆனந்தபுஷ்கரணி பெயர்கொண்ட திருக்குளம் உள்ளது. தொடர் மழையால் குளத்தில் நீர் நிரம்பி உள்ள நிலையில், குப்பை கழிவுகளால், மாசடைந்து இருக்கிறது.கோவில் குளத்தில் பிளாஸ்டிக் கவர்கள், துணிகள் என, கழிவுகள் தேங்கியும், பாசி செடிகள் சூழ்ந்தும், இருப்பதை கண்டு பக்தர்கள் வருத்தம் அடைகின்றனர். படிக்கட்டு முழுதும் செடிகள் வளர்ந்து இருக்கின்றன.குடியிருப்புகள் மற்றும் கோவிலுக்கு ஒரு சிலர் வீசும் கழிவுகளே குளத்தில் குவிந்து கிடக்கிறது. அவ்வப்போது அப்பகுதி சிறுவர்கள் குளத்தில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி, படித்துறைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.குளத்தினை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்தால், கழிவுகள் தேங்குவதை தடுக்க முடியும் என, பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE