போலீஸ் டைரி

Added : டிச 15, 2020
Share
Advertisement
விபத்தில் ஒருவர் பலிமப்பேடு: திருப்பந்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்மொழி, 53. பேரம்பாக்கம் துணை சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில், கொரோனா தடுப்பு பணி மேற்கொண்ட இவர், நேற்று முன்தினம், மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை வழியே, வேகா டூ - வீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, கோவிந்தமேடு கிராமம் அருகே வந்த போது, சாலை வளைவில் கட்டுப்பாட்டை

விபத்தில் ஒருவர் பலிமப்பேடு: திருப்பந்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்மொழி, 53. பேரம்பாக்கம் துணை சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில், கொரோனா தடுப்பு பணி மேற்கொண்ட இவர், நேற்று முன்தினம், மப்பேடு - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை வழியே, வேகா டூ - வீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, கோவிந்தமேடு கிராமம் அருகே வந்த போது, சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேகா டூ - வீலர் சாலையோர தடுப்பு கல்லில் மோதி, புளிய மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.இதில், தலையில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த மப்பேடு போலீசார், உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, இவரது மனைவி ஹேமலதா அளித்த புகாரையடுத்து, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மனைவி மாயம்கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, பிஞ்சிவாக்கம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 37. இவருக்கு, விமலா, 29 என்ற மனைவியும், 7, 9 வயதில், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.அதே பகுதியில் உள்ள சகாய அன்னை ஆலயத்தில் சமையல் வேலை செய்து வரும் இவர், கடந்த 11ம் தேதி, வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சுரேஷ் அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X