பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : டிச 15, 2020
Share
Advertisement
மின்வாரிய அலுவலகம் முற்றுகைஊத்துக்கோட்டை: உயர் மின் அழுத்தத்தால் வீடுகளில் இருந்த, 'டிவி' உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுதடைந்ததால், பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பெரியபாளையம், அம்பேத்கர் நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து, திடீர், திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு

மின்வாரிய அலுவலகம் முற்றுகைஊத்துக்கோட்டை: உயர் மின் அழுத்தத்தால் வீடுகளில் இருந்த, 'டிவி' உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுதடைந்ததால், பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பெரியபாளையம், அம்பேத்கர் நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து, திடீர், திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.அது போன்ற சமயங்களில், வீட்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுதடைந்து விடும். இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு, வீடுகளில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுதடைந்தன.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பழுதடைந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பெரியபாளையம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சீரமைப்பதாக கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இருளர்கள் ஆர்ப்பாட்டம்கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி அருகே, புதுப்பேட்டை கிராமத்தில், 14 குடும்பங்களை சேர்ந்த இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு, வீட்டுமனைகள் உள்ள நிலையில், அதற்கான பட்டா வழங்கப்படவில்லை என, அதிருப்தியில் உள்ளனர்.பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், நேற்று, புதுகும்மிடிப்பூண்டி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, பட்டா கேட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய் துறையினர் உறுதியளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.மின் வாரிய அலுவலகம் முற்றுகைஊத்துக்கோட்டை: பெரியபாளையம், அம்பேத்கர் நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மின் டிரான்ஸ்பார்மரில் இருந்து, திடீர், திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.அது போன்ற சமயங்களில், வீட்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுதடைந்து விடும். இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டு, வீடுகளில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பழுதடைந்தன. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பழுதடைந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பெரியபாளையம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சீரமைப்பதாக கூறினர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இருளர்கள் ஆர்ப்பாட்டம்கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி அருகே, புதுப்பேட்டை கிராமத்தில், 14 குடும்பங்களை சேர்ந்த இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு, வீட்டுமனைகள் உள்ள நிலையில், அதற்கான பட்டா வழங்கப்படவில்லை என, அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில், நேற்று, புதுகும்மிடிப்பூண்டி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு, பட்டா கேட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய் துறையினர் உறுதியளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X