திருப்போரூர் - கிராமப்புறங்களில் இயக்கப்பட்ட அரசு பஸ்களை, மீண்டும் இயக்க வேண்டும் என, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருக்கழுக்குன்றம் -- திருப்போரூர் வழியாக, மானாம்பதியிலிருந்து அடையாறு பகுதிக்கு, தடம் எண்: 522 மாநகர பஸ் இயக்கப்படுகிறது.இந்த பஸ், மானாம்பதியில் புறப்பட்டு ஆமூர், திருப்போரூர், கேளம்பாக்கம், திருவான்மியூர் வழியாக அடையாறு செல்கிறது.அதேபோல், திருப்போரூர் -- செங்கல்பட்டு இடையே, கரும்பாக்கம் கிராமத்திலிருந்து திருவான்மியூருக்கு, தடம் எண்: 523ஏ மற்றும் முள்ளிப்பக்கத்தில் இருந்து திருவான்மியூருக்கு தடம் எண்: 523 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்கள், முள்ளிப்பாக்கம், கரும்பாக்கத்திலிருந்து புறப்பட்டு, வெங்கூர், கொட்டமேடு, செம்பாக்கம், திருப்போரூர், கேளம்பாக்கம், சோழிங்கநல்லுார், பெருங்குடி வழியாக திருவான்மியூர் செல்கின்றன.கிராம மக்கள் பலர், திருப்போரூர் மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கில், பல கட்ட தளர்வுகளுக்கு பின், பஸ்கள் மீண்டும் இயக்கப்படும் நிலையில், 522, 523, 523ஏ ஆகிய பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை. இதனால், கிராமப்புற மக்கள், பஸ் சேவை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.எனவே, போக்குவரத்து நிர்வாகம், நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE