இந்திய ராணுவத்தின் கடும் எதிர்ப்பால் சீனப் படை பின்வாங்கியது: ராஜ்நாத் சிங்

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : ''இந்திய ராணுவத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக, லடாக்கில், சீனப் படைகள் பின்வாங்கின,'' என, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கில், பொது எல்லைக் கோடு அருகே, ஆக்கிரமிப்பு முயற்சியில் இறங்கிய சீன ராணுவத்தை தடுக்க, இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எழு மாதங்களுக்கு மேலாக, அங்கு பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில்,


புதுடில்லி : ''இந்திய ராணுவத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக, லடாக்கில், சீனப் படைகள் பின்வாங்கின,'' என, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.



latest tamil news




கிழக்கு லடாக்கில், பொது எல்லைக் கோடு அருகே, ஆக்கிரமிப்பு முயற்சியில் இறங்கிய சீன ராணுவத்தை தடுக்க, இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், எழு மாதங்களுக்கு மேலாக, அங்கு பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில், ராஜ்நாத் சிங், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியதாவது: நம் நாடு, இறையாண்மையை காக்க, தேவைப்பட்டால் யாருடனும் போரிட்டு, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும்.

இமயமலை பகுதியில், ஆக்கிரமிப்பு முயற்சி நடந்துள்ளது; ஒப்பந்தங்கள் மீறப்படுகின்றன. இந்திய - பசிபிக் கடல் பிராந்தியத்திலும் இதே போக்கு காணப்படுகிறது. லடாக்கில், பொது எல்லைக்கோடு அருகே ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையான தருணத்தில், நம் ராணுவ வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். சீனப் படைகளுடன் மிகுந்த தீரத்துடன் போரிட்டு, அவர்களை பின்வாங்கச் செய்துள்ளனர். இந்தாண்டு, நம் ராணுவத்தினர் நிகழ்த்திய வீரச் செயல்களை கேட்டு, வரும் தலைமுறையினர் பெருமை கொள்வர்.


latest tamil news




எப்போது எல்லைப் பிரச்னை ஏற்பட்டாலும், இந்தியா - சீனாவின் ராணுவ பலம் ஒப்பீடு
செய்யப்படுகிறது. யாருக்கு ராணுவ பலம் அதிகம் உள்ளது என, விவாதிக்கப்படுகிறது.
இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தை, சீனாவின், 80 சதவீத மக்கள், 1949ல் நடந்த புரட்சி வரை பின்பற்றியிருந்தனர். இந்த வகையில், இந்தியா, ஒருவரை கூட போருக்கு அனுப்பாமல், 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக, சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளது. இது போன்ற வலிமை இந்தியாவுக்கு உள்ளது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. தொழில் நிறுவனங்கள், ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் தயாரிப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும்
ஆர்வமுடன் ஈடுபடு வேண்டும்.

உள்நாட்டு ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு ஊக்குவிக்க, மத்திய அரசு, ஏராளமான சலுகைகள் வழங்கியுள்ளது. அதை பயன்படுத்தி, நாட்டின் பாதுகாப்பையும், அதேசமயம், பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
15-டிச-202010:52:51 IST Report Abuse
Amirthalingam Shanmugam சீனா உண்மையில் பின்வாங்கியிருந்தால் நல்லது. அதை பாமரனும் தெரிந்துகொள்ளும்படி தெரிவித்து, மக்களுக்கு தங்கள்மேல் உள்ள மதிப்பை அதிகப்படுத்திக்கொள்ளவும்.
Rate this:
Cancel
baala - coimbatore,இந்தியா
15-டிச-202009:58:17 IST Report Abuse
baala இதுதாங்க சாத்தியமான உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X