விருதுநகர் : அவர் கூறியதாவது: ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த இயந்திரம் நகராட்சியில் உள்ள 12 ஆயிரம் பாதாளசாக்கடை இணைப்புகளில் உள்ள அடைப்பை சரி செய்யும். ஆபத்தான விஷ வாயுக்களை கண்டறியும் வசதி, கேமிரா வசதி உள்ளதால் பாதாளசாக்கடை, செப்டிக் டேங்க் அடைப்புகளை எளிதில் அகற்றலாம். தானியங்கி முறையில் இயங்கும் இது உலகிலேயே முதல் முறையாக மேன்ஹோலில் இறங்கி கழிவுகளை அகற்றும் வேலையை செய்வது இதன் சிறப்பம்சமாகும், என்றார்.
டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி, பொறியாளர் குருசாமி, ஒ.என்.ஜி.சி., பொதுமேலாளர் வெங்கட்ராமன், ஹேண்ட் இன் ஹேண்ட் பொதுமேலாளர் புத்தேரி பாபு பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE