விருதுநகர் : மகப்பேறு பிரிவின் வார்டுகளில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளின் உறவினருக்கு அனுமதி கிடையாது. பார்வையாளர் நேரத்தில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இருந்தாலும் அவசர தேவை, மருந்து மாத்திரை வாங்குதல் உள்ளிட்ட காரணங்களுக்காக உறவினர்கள் வெளியே மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருப்பர். இவர்கள் வெயில், மழையிலும் நிற்க வேண்டிய நிலை இருந்ததால் மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரினர்.
இதைதொடர்ந்து மகப்பேறு மருத்துவமனை வெளியே மேற்கூரையுடன் ெஷட் அமைத்தனர். 20 பேர் வரை மட்டுமே இருக்க முடியும். இதனால் அம்மா உணவகம் அருகே உள்ள ஓய்வறையில் தங்கினாலும் நோயாளிக்கு அவசரம் என்றால் அழைத்து வர முடிவதில்லை. இதனால் அங்கேயும் தங்க முடியாத நிலை உள்ளது.
மழை பெய்தால் தண்ணீர் தேங்கி கொசுத்தொல்லை ஏற்படுகிறது. கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்ட இங்கு நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு நிரந்த அறை கட்டி தருவது அவசியமாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE