பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை வீடுக்கு பொருத்துவதில் ஏன் தாமதம்?

Added : டிச 15, 2020
Share
Advertisement
வாலாஜாபாத்' பயனாளிகள் கட்டப்படும் பசுமை வீடுகளுக்கு, சோலார் விளக்குகள் ஏன் பொருத்தப்படுவதில்லை என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், பசுமை வீடு வழங்கும் திட்டத்தில், நலிந்தோருக்கு குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு குடியிருப்புக்கும், 30 ஆயிரம் ரூபாய் செலவில், சோலார்

வாலாஜாபாத்' பயனாளிகள் கட்டப்படும் பசுமை வீடுகளுக்கு, சோலார் விளக்குகள் ஏன் பொருத்தப்படுவதில்லை என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், பசுமை வீடு வழங்கும் திட்டத்தில், நலிந்தோருக்கு குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு குடியிருப்புக்கும், 30 ஆயிரம் ரூபாய் செலவில், சோலார் விளக்குகள் அமைக்க வேண்டும். சோலார் விளக்குகள் பொருத்தும் பணிக்கு, தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், 2018- - 19ம் ஆண்டுக்கு வழங்கப்பட்ட சோலார் விளக்குகளை, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், பசுமை வீடு கட்டும் பயனாளிகளின் வீடுகளில் ஏன் பொருத்தாமல் உள்ளது என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும், வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடத்தில், சோலார் விளக்குகள் மற்றும் பேட்டரிகள் வைத்திருப்பதால், அவை வீணாகும் அபாயம் உள்ளதாகவும், அவர்கள் கூறுகின்றனர்.எனவே, ஊரக வளர்ச்சி துறையினர், பயனாளிகள் கட்டும் பசுமை வீடுகளுக்கு, சோலார் விளக்குகளை பொருத்தி கொடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X