காஞ்சிபுரம்; ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்தாண்டு, 65 ஏரிகளில், 80 சதவீத அளவில், குடிமராமத்து திட்ட பணி நடந்துள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில், பொதுப்பணித் துறை பராமரிக்கும், 909 ஏரிகள் உள்ளன.வடகிழக்கு பருவ மழைக்கு முன், அனைத்து ஏரிகளின் நீர்நிலைகளில், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள, அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட ஏரிகள், குளங்கள் சீரமைக்கப்பட்டன.அதேபோல், பொதுப்பணித் துறை பராமரிப்பு இருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 29 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில், 36 ஏரிகளில், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அடுத்தக்கட்ட நிதி இல்லாததால், பணிகள் முழுமை அடையாமல் உள்ளன.இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒருங்கிணைந்த மாவட்டத்தில், குடிமராமத்து பணி மேற்கொண்டதில், 65 ஏரிகளில், 80 சதவீத பணி முடிந்துள்ளது.இதில், கரை பலப்படுத்துதல், மதகு சீரமைப்பு, துார்ந்து போன நீர்வரத்து கால்வாய்கள், பாசன கால்வாய்கள் சீரமைக்கப்பட்டன. இதற்காக, 8.80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நிதி வராததால், பணிகள் முழுமை அடையாமல் உள்ளன.இந்த ஆண்டு பருவமழையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 321 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில், 477 ஏரிகளும், முழுமையாக நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகள், நிரம்பும் நிலையில் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE