உணவு தயாரிப்பாளர்களுக்கு ஈட் ரைட் சேலஞ்ச் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவு தயாரிப்பாளர்களுக்கு 'ஈட் ரைட் சேலஞ்ச்' பயிற்சி

Added : டிச 15, 2020
Share
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவுப்பொருள் தயாரிப்பாளர்களுக்கு 'ஈட் ரைட் சேலஞ்ச்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் சுகாதாரமான, பாதுகாக்கப்பட்ட உணவு. சரியான உணவை சரியான விகிதத்தில் சாப்பிட்டுஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உணவு பாதுகாப்பு துறை சார்பில் 'ஈட் ரைட்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவுப்பொருள் தயாரிப்பாளர்களுக்கு 'ஈட் ரைட் சேலஞ்ச்' பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் சுகாதாரமான, பாதுகாக்கப்பட்ட உணவு. சரியான உணவை சரியான விகிதத்தில் சாப்பிட்டுஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உணவு பாதுகாப்பு துறை சார்பில் 'ஈட் ரைட் சேலஞ்ச்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தில் உணவின் முக்கியத்துவம், வீணடிக்காமல் பயன்படுத்துவது, ஆரோக்கியமான உணவு தயாரிப்பு முறை, சுகாதாரமான உணவை விற்பனை செய்வது, மீதமான உணவு மற்றும்எண்ணெயை பயோ எரிபொருளாக மாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள ஓட்டல், பேக்கரி, சத்துணவு சமையலர்கள், உணவு பொருள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.மேலும் ஆரோக்கியமான உணவு முறை குறித்து, பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது என, உணவு பாதுகாப்புஆய்வாளர் செல்வம் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X