சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'காஸ்' கசிவால் 'ப்ரிஜ்' வெடித்து தம்பதி, குழந்தை பலத்த காயம்

Added : டிச 15, 2020
Share
Advertisement
திருப்போரூர்; கேளம்பாக்கத்தில், 'காஸ்' பரவியது தெரியாமல், 'ப்ரிஜ்' திறந்தபோது வெடித்ததில், கணவன், மனைவி மற்றும் 4 வயது சிறுமி, பலத்த தீக்காயமடைந்தனர்.திருப்போரூர் அடுத்த, கேளம்பாக்கம், அய்யப்பன் தெருவில் வசிப்பவர் ரவி, 40; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மேனகா, 35, நான்கு மாத கர்ப்பிணி. இவர்களுக்கு, 4 வயது, பெண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் இரவு, 'காஸ்' சிலிண்டரை

திருப்போரூர்; கேளம்பாக்கத்தில், 'காஸ்' பரவியது தெரியாமல், 'ப்ரிஜ்' திறந்தபோது வெடித்ததில், கணவன், மனைவி மற்றும் 4 வயது சிறுமி, பலத்த தீக்காயமடைந்தனர்.திருப்போரூர் அடுத்த, கேளம்பாக்கம், அய்யப்பன் தெருவில் வசிப்பவர் ரவி, 40; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மேனகா, 35, நான்கு மாத கர்ப்பிணி. இவர்களுக்கு, 4 வயது, பெண் குழந்தை உள்ளது.நேற்று முன்தினம் இரவு, 'காஸ்' சிலிண்டரை அணைக்காமல், வீட்டின் அறையில், மூவரும் துாங்கியுள்ளனர்.நேற்று காலை, 6:30 மணிக்கு, சமையல் அறைக்கு சென்ற மேனகா, டீ போடுவதற்காக, ப்ரிஜை திறந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக, காஸ் கசிவு காரணமாக, பயங்கர சத்தத்துடன் ப்ரிஜ் வெடித்தது.இதில், வீட்டின் பெரும்பாலான பின்பகுதி சேதமடைந்தது. கண்ணாடி, ஜன்னல்கள் அனைத்தும் நொருங்கின. மேலும், மேனகா, ரவி மற்றும் சிறுமி, பலத்த தீக்காயமடைந்தனர்.வெடி சத்தத்தை கேட்டு வந்த அருகாமை வீட்டினர், அலறியபடி கிடந்த மூவரையும் மீட்டு, வரவழைக்கப்பட்ட, '108' ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில், மூவரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து, கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X