திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். 'இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சக்கர நாற்காலி உபயோகிக்கும் வகையில் சாய்வு தளத்துடன் கூடிய நவீன கழிப்பறை கட்டித்தர வேண்டும்.சுய தொழில் செய்ய மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் முன்னுரிமை அடிப்படையில் கிடைக்க செய்ய வேண்டும்.தண்ணீர் மற்றும் காற்று மெத்தை இலவசமாக வழங்க வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதன் பின் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE