சென்னை; சென்னை மாவட்டத்தில் பணியாற்றும் எட்டு தாசில்தார்களுக்கு, 120 நாட்கள் நீதித்துறை பயிற்சி, நேற்று முதல் துவங்கியது.வருவாய்த் துறையில் பணியாற்றும், தனி தாசில்தார் நிலையிலான அலுவலர்களுக்கு, தாசில்தார் மற்றும் துணை கலெக்டர் நிலை அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.குறிப்பாக, தாசில்தாராக பணியாற்றும்போது, சட்டம் -- ஒழுங்கு பிரச்னைகளை கையாள வேண்டும் என்பதால், தனி தாசில்தார் நிலை அலுவலர்களுக்கு, நீதித்துறையில், 120 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.அதன்படி, சென்னை மாவட்ட அளவில் பணியாற்றும், எட்டு தனி தாசில்தார்களுக்கு, நேற்று முதல் நீதித்துறை பயிற்சி துவங்கியது.மாம்பலம் தனி தாசில்தார் இளவரசன், தண்டையார்பேட்டை தனி தாசில்தார் ஜெயந்தி மாலா உட்பட, பல்வேறு துறைகளில் பணியாற்றும், எட்டு தாசில்தார்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE