செங்குன்றம்; காரில் துாங்கிக் கொண்டிருந்த ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்கள், அவரிடம் இருந்து, பணம், மொபைல் போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.மதுரையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 26; சென்னையில் கார் ஓட்டி வந்தார். அவரது உறவினர் வீடு, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், பி.டி.மூர்த்தி நகர், சேதுபதி தெருவில் உள்ளது.மணிகண்டன், நேற்று பணி முடிந்து, சென்னைக்கு செல்லும் வழியில், பாடியநல்லுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, நள்ளிரவு ஆனதால், அவர்களை தொந்தரவு செய்ய விரும்பாமல், அங்குள்ள அம்மன் கோவில் திடல் அருகே, காரை நிறுத்தி, அதில் படுத்து துாங்கினார்.அதிகாலை, 1:30 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் வந்த, ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை எழுப்பி, கைகளால் சரமாரியாக தாக்கியது.அவரிடம் இருந்து, 8,000 ரூபாய் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறித்துச் சென்றது. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE