சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 200 விவசாயிகள் குண்டுகட்டாக கைது

Added : டிச 15, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப்பெற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று போராட்டம் அறிவித்து இருந்தனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நேற்றுகாலை அஞ்சலி

திண்டுக்கல் : மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப்பெற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.

டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று போராட்டம் அறிவித்து இருந்தனர். போலீசார் அனுமதி மறுத்த நிலையில், நேற்றுகாலை அஞ்சலி ரவுண்டானாவிலிருந்து விவசாயிகள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்றனர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன் சென்றதும், பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கைதாகி தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டவர்கள் உணவை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி, காங்., விவசாய அணி மாநில பிரிவு செயலாளர் வசந்தி, ம.தி.மு.க., செல்வராஜ்,, மாதர்சங்கம், வாலிபர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ரயில் மறியல் முயற்சிதிண்டுக்கல்லில் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் ஊர்வலமாக வந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர். மாவட்ட செயலாளர் சின்னகருப்பன் தலைமை வகித்தார். மத்திய மண்டல செயலாளர் மருதை திருவாணன், மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர் பெரியார்மணி, கொள்கை பரப்பு செயலாளர் சங்கத்தமிழன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X