திருவேற்காடு; வீட்டில் பதுக்கி வைத்து, கஞ்சா விற்பனை செய்த இரு பெண்கள் உட்பட மூவர் கைதாகினர்.சென்னை, திருவேற்காடு, திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் சங்கிலி ராஜேஷ், 27. அவரது மனைவி ஜெகதாம்பாள், 30. அவரது கூட்டாளி சுதா, 27, ஆகியோர், கஞ்சா பொட்டலங்கள் விற்பது குறித்து, திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம், திருவேற்காடு, மாதிராவேடு அருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரையும், போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE