திண்டுக்கல் : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சங்காபிேஷக பூஜைகள் நடந்தது.திண்டுக்கல் அபிராமியம்மன், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, சத்திரம் தெரு செல்வ விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், நாகல் நகர் புவனேஸ்வரி, கிழக்கு ரத வீதி லிங்கேஸ்வரர் கோயில்களில் சோமவாரத்தை முன்னிட்டு யாகத்துடன் 108 சங்குகள் வைத்து சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
வடமதுரை:
பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிேஷக விழா நடந்தது. புண்ணியாவாசனம், கணபதி பூஜை, கும்ப பூஜையை அடுத்து சங்கு பூஜை நடந்தது. இதன் பின் வேத மந்திரங்கள் முழங்க ேஹாமம் நடந்தது. பால், பன்னீர், இளநீர், பன்னீர், மஞ்சள் நீர், தயிர், விபூதி, தேன், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிேஷகங்களை தொடர்ந்து சிவலிங்க விடிவில் அலங்கரிப்பட்ட 1008 சங்காபிேஷகம் நடந்தது. கைலாசநாதர், செண்பகவள்ளி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE