வேளச்சேரி; தெரு தொட்டிகளில், எளிதில் தீப்பிடிக்கும் மற்றும் அபாயகரமான குப்பையை கொட்டினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அடையாறு மண்டலத்தில், அக்டோபர் முதல், செயல்திறன் அளவீட்டு முறையில், குப்பை கையாளும் பணியை, 'உர்பசர்சுமித்' நிறுவனம் செய்கிறது.பெரும் அதிர்ச்சிதினமும், 530 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதற்காக, தெருக்களில், 2,226 தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 510 பேட்டரி வாகனங்கள், 24 காம்பாக்டர் லாரிகள் உள்ளன. பொதுமக்களிடம் இருந்து, குப்பையை தரம் பிரித்து வாங்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.இதில், சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், குப்பையை தரம் பிரிப்பது முழுமை பெறவில்லை. இது ஒருபுறமிருக்க, தெரு தொட்டிகளில், எளிதில் தீப்பிடிக்கும் மரக்குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால், அருகில் வசிப்போர் மிகவும் அச்சப்படுகின்றனர்.இரு தினங்களுக்கு முன், மரப்பட்டறையில் இருந்து லோடு வாகனத்தில் ஏற்றி வந்த மரக்கழிவுகள், வேளச்சேரி தெருக்களில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொட்டப்பட்டது.இதை தடுத்த துாய்மை ஊழியர்களை, மரப்பட்டறை உரிமையாளர் தாக்கினார். அபராதம் விதித்து, வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்ற மாநகராட்சி ஊழியர்களையும் தடுத்தார்.போலீசார் வர தாமதமானதால், ஊழியர்களை மிரட்டி, வாகனத்தை எடுத்துச் சென்றார். இந்த சம்பவம், பகுதிவாசிகள் மற்றும் துாய்மை ஊழியர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நடவடிக்கைஇது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கட்டட கழிவுகள், மரக்கழிவுகள் இருந்தால், அந்தந்த வார்டு அதிகாரியை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். துாய்மை ஊழியர்கள், இருப்பிடத்திற்கு வந்து, குப்பையை சேகரிப்பர். எளிதில் தீப்பிடிக்கும் மரக்கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தெரு தொட்டியில் கொட்டக்கூடாது. அதையும் மீறி கொட்டினால், வாகனத்தை பறிமுதல் செய்வதோடு, கொட்டிய நபர்களை, காவல் நிலையத்தில் ஒப்படைத்து, கைது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE